என் அம்மா

ஆயிரம் உறவு
ஆறுதல் பாடிடினும்
கருவறையில் காதோரம்
நன் கேட்ட தாலாட்டு
மனதோரம் கனக்கிறது!

உன் மடி கண்ட சுகம்
இல்லையடி
இப்புவியில் வேறெங்கும்!
உன் சுவாசத்தில் நான் உணர்ந்த
இனிமை இல்லையடி!
தென்றலிலும்!!

தலை வருடி கதை பேசி
நிலவொளியில்
நீ ஊட்டிய
ஒரு பிடிச் சோறு
இன்னும் நினைவுகளில்
இனித்திருக்க!


உன் முகம் தேடி
தொடர்ந்த பயணங்கள்
நீண்டு கொண்டே செல்கிறது!
உனக்கு நான் இட்ட முற்று புள்ளியிலிருந்து
எனக்கு நீ தொடக்கிய முடிவிலி வரை!!

எழுதியவர் : (19-Oct-14, 4:14 pm)
Tanglish : en amma
பார்வை : 244

மேலே