அழகு பதுமைக்கு - இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

! அழகு பதுமைக்கு - இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !
மின்னலும் தங்க தென்றலும்
வந்ததோ இந்த வானிலே?!!!
அழகு பதுமையின் பிறந்தநாளைக்
காண ஆசையோடு வந்ததோ?

அகத்தியனும் ஆசை கொள்வானோ?
அடி நெஞ்சம் பதறுதே!
மௌனம் என்ன உன் மறுபெயரோ?
வாயடைத்து நிற்கிறோம்!!!
கரங்கள் இரண்டை வீசி செல்லும்
காட்சி என்னை கொல்லுதே!
அழகு செல்லத்தின் பிறந்தநாளை எண்ணி,
என் அகமும் கொஞ்சம் மகிழுதே!

உருட்டு கண்களில்,
கள்ள பார்வை!!!
ஓர விழிகளில்
மயக்கும் மாயம்!!!
அன்றில் பறவையோ?
என ஐயம் கொண்டேன்!!!
ரம்பை மகளோ? என
கனவும் கண்டேன்?!!!

உன் பிறந்தநாள் என்ன,
வருட குறைப்பா?
மேனி எங்கும் மின்னுதே!!!

பெரிய கடவுளின்,
சின்ன பொம்மையொன்று
புத்தாடை உடுத்தி வருகுதே!!!
மரகத புறா ஒன்று!
வீதி உலா வந்து,
என் சாப விமோச்சனம் போக்குதே!

தேடி அகப்படாத,
புள்ளிமானே!
கையில் சிக்காத,
விலாங்கு மீனே!
ஆடவர் விரும்பும்,
அமைதி பூங்கா!
உனக்கு சொல்வேன்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

எழுதியவர் : Sherish பிரபு (19-Oct-14, 4:11 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 1377

சிறந்த கவிதைகள்

மேலே