இவள்
இவள்
இவள் என் வாழ்வில் ஒரு கடிகார முள்ளாய் இருந்தால். என் வாழ்வை
சுற்றிய படியே நிமிடங்கள் தோறும்
என் நினைவுகளோடு.
மெய் பேசுவது மட்டுமே அவளுக்கு பிடிக்கும்,
ஆனாலும் என் பொய்களையும் சகித்து கொள்ள தெரிந்தவள், ஓசையின் கூர்மை அவளின் கோபம், அதனினும் கூர்மை அவளின் மனம், நடக்க தெரியாதவள், நான்கு வயது மழலைமொழிகாரி, வலிகளின் வகுப்பிடம், கற்பனையின் கடல்,
அழுகையின் அரசி, அம்மாவின் அடிமை, தங்கைக்கு தாய்,
அப்பாவின் தாலாட்டு, எனக்கு மட்டும்??, இவளின் வழி நெடுக்க ரோஜாக்கள் வாசம்,
அவளை நான் புரிந்து கொள்ள வில்லையாம்?
இது அவளின் குற்றச்சாட்டு,
ஏன் பெண்ணே உன்னால் என் கண்பார்த்து சொல்ல முடியுமா?,
எனக்கும் அசைகள் உண்டு அவள் மடி துயில, கண்ணம் தழுவ, விரல் கடிக்க, விழி பார்க்க, நீண்ட தூரம் நடை பயில, மொழி கேட்க, முத்தம் வாங்க கொடுக்க, என் நினைவுகளை மட்டுமே படிக்க தெரிந்த அவளுக்கு என் நிஜங்களை படிக்க தெரியவில்லை?? என் மௌனத்தின் மொழி அவள் அறியமாட்டாள், என் மனதின் வலி அவள் உணரமாட்டாள், என் தோள்களின் சுமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை!!! வருத்தம் வேண்டாம் பெண்ணே உனக்கும் சேர்த்து நானே !!!!!!!! ????? ''''' ++++++ ------- ,,,,,,, ******* இவை அனைத்துமாய்.......,!!!!!!