அவனுக்கு மட்டுமே அவனைப் புரியும்

காண்பவர்
கண்களுக்கு - அது
இரவிலே வானவேடிக்கை.....

கவிஞனின்
கண்களுக்கு - அது அவன்
காதலி கூந்தலில் கலர் பூக்கள்.....

மோகத்தின் இலக்கணம்
யார் அறிவார் ? தவ
மோன நிலை கடந்தோர்
தான் அறிவார்...!!

எனவே

ஞாலத்தில் அனைத்தையும்
கவி அறிவான் - அவன்
ஞான நிலை கவிதை என்று
யார் உணர்வார் ?!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (20-Oct-14, 8:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 80

மேலே