என் செல்ல மகனே
சுட்டி தனமாய் கிட்ட வந்தாய்
முட்டி மோதி ஆட்டம் போட்டாய்
சிரித்துச் சிரித்து என்னை சிரிக்க வைத்தாய்
அழுதும் உன் அழகால் சிரிக்க வைத்தாய்
கொஞ்சிக் கொஞ்சி என்னை அழ வைத்தாய்
கெஞ்சிக் கெஞ்சி உன் தேவைப் பெற்றாய்
பேசிப் பேசி என் தேவை மறக்கச் செய்தாய்
மௌனமிருந்து என்னை வென்றாய்.
என் செல்ல மகனே!
உன்னால் தானே நான் எல்லாம் பெற்றேன்!

