நம்மவர்

நம் வீதியை சேர்ந்த ஒரு மனிதரை
மற்றோர் வீதியில் பார்த்திடும் வேளையில்
இவர் நம் வீதியைச் சேர்ந்தவர் என்று நாம் மகிழ்ந்திடுவோம்..!

நம் ஊரினை சேர்ந்த ஓர் மனிதரை
வேற்றூர் தனில் சந்திக்கும் போழ்திலே..
இவர் நம்மூரென அறிந்து நாம் இன்புறுவோம் !

நம் நாட்டினை சேர்ந்த ஓர் மனிதரை
அயல் நாட்டினில் கண்டிட நேர்கையில்
இவர் நம் நாட்டினர் என்றே அகம் மகிழ்வோம்..!

நம் உலகினில் வாழ்ந்த ஓர் மனிதரை
இன்னொரு கிரகத்தில் சந்திக்கும் நிலை வந்தால்
இவர் நம் புவியினை சேர்ந்தவர் எனக் களிப்போம்!

ஒரு வீதிக்குள்..
ஒரு ஊருக்குள்..
ஒரு நாட்டுக்குள்..
ஒரு உலகிற்குள்..
எத்தனை விரோதங்கள்..!
எத்தனை குரோதங்கள்..!

இன்னொருவனும் ஒரு மனிதனே..
என நினைப்பவன் கூட இறைவனே!
மண்ணதனில் இன்பமாய் வாழவே..
வேற்றுமைகள் நாளும் ஒழியவே
ஏங்கிடுதே என் மனமே!

எழுதியவர் : karuna (20-Oct-14, 10:23 am)
பார்வை : 92

மேலே