அன்பே தாழ் திறவாய்

கருவறையோ யாரோடும் வருவதில்லை..
கல்லறைக்கு செல்லும் நாள் தெரியவில்லை..
என்னோடு மணவறையில் என்றமர்வாய்-உந்தன்
மன அறையை திறந்தின்று வாய்மொழிவாய்...
சில்லறையாய் பேசியதாய் நினைத்துவிட்டால்...
ஒரு முள்ளறையில் நீ என்னை அடைத்திடுவாய்..
புல் தரையில் கிடந்திங்கு உழல்கின்றேனே -அன்பே
தினவொடித் தென் கனவறையின் தாழ் திறவாய்...