சிலேடை வெண்பா

சிராஜும் பாக்கியராஜும் ...
சிலேடை வெண்பா...-முஹம்மது நௌபல்

பெரியாள் எனவும் பெயரினில் ராஜும்
உரியநல் பாக்யா உடனும்-அரிதாய்
நடிக்கும் மகனும் நலமகளும் பெற்ற
படிக்குநீ பாக்கிய ராஜு.

பாக்கியராஜ்:
பெரிய மனிதர்,அவர் பெயரில் ராஜ் என்ற சொல் இருக்கிறது,பாக்யா என்ற நல்ல பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார் ,அவர் மகன் எப்போதாவது நடிப்பில் ஈடுபடுவார் ,மகளும் நல்ல பெயருடன் திகழ்கிறார்,ஒரு மகன் ஒரு மகள் அவருக்கு!

சிராஜ்:
பெரியாள் என்று அழைக்கப் படுவார்,இவர் பெயரிலும் ராஜ் என்ற வார்த்தை இருக்கிறது ,இவருக்கு உரியவர் 'பாக்கியா' என்ற நல்ல மனைவி,இவர் மகனும் எப்போதாவது நடிப்பார்,மகளும் நல்ல மகள்,ஒரு மகன் ஒரு மகள் தான் இவருக்கும் ,எப்ப்தும் படிக்கும் பழக்கமுடையவர்,பாக்கியம் பெற்ற வாழ்க்கைக்கு சொந்தக் காரர் .

எனவே இருவரும் ஒன்றே!

எழுதியவர் : அபி (20-Oct-14, 11:38 am)
Tanglish : siledai venba
பார்வை : 83

மேலே