இப்படிக்கு அவள் - வேலு

ஆயிரம் எண்ணங்களின் கவிதை
கன நேர ஜுவாலை
அழகின் குறிப்பேடு
கார்கால மழை
கடலின் தெப்பம்
குழந்தையின் காகித கப்பல்
காகிதத்தில் பட்டம்
ஓவியனின் துரிகை
வானவில்லில் வண்ணம்
வானில் நிலா
சிரிப்பில் குழந்தை
பயணத்தில் ஜன்னல் ஓரம்
என் வாழ்க்கையில் துணை
அவளை பற்றி சொல்ல இனி ஒன்னும் இல்லை
மொழியில் அவள் தமிழ் !!!!!