என் வரிகளில் - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை வாரணம் ஆயிரம்

என் வரிகளில் - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை (வாரணம் ஆயிரம் )

" நெஞ்சமெல்லாம் உன் நினைவலை
எண்ணிட்டால் தோற்றிடும் கடல் அலை
எண்ணிட மறந்தாலோ (ஆழி ) பேரலை
என் நெஞ்சில் ஆழ் துளை

சுற்றாமல் சுற்றுதே என் தலை
சுற்றிட வைப்பதே உன் வேலை
கண்ணே உன் கவி தேன், பலாச்சுளை
பெண்ணே நீ பால் சிலை

என் அலையே அலையே சிறு அலையே
நீ சிலையே சிலையே அரும் சிலையே

என்ன விலையே விலையே உன் விலையே
நீ விலைக்கே எட்டா பொன் சிலையே

" நெஞ்சமெல்லாம் உன் நினைவலை
எண்ணிட்டால் தோற்றிடும் கடல் அலை
எண்ணிட மறந்தாலோ (ஆழி ) பேரலை
என் நெஞ்சில் ஆழ் துளை

தீண்டும் இன்ப தமிழில் வடிக்கும்
தேனான உன் வரிகள் பிடிக்கும்
உன்னை ,எண்ணி , எண்ணி இதயம் துடிக்கும்
என்னை தவிர்க்கும் போது துடித்து வெடிக்கும்

உன் இதயத்தில் இடம்கேட்டு (உனக்கே) தெரியாமல் யாசிப்பேன்
இடமில்லை என்றாலும் உனை பிரியாமல் நேசிப்பேன்
என்னோடு வா மன்றம் வரைக்கும்
என் வரிகளை பார் என்னை பிடிக்கும்

என் யாரோ அவள் என தெரியாதே
என் நெஞ்சே உண்மை சொல்லாதே
அவள் ஊரும் பேரும் தெரியாதே
என் நெஞ்சே உண்மை சொல்லாதே ........

தூக்கத்தினை தூக்கிலிட்டாய்
உன் தாக்கத்தினால் எனை தாக்கிவிட்டாய்
உன்னை போற்றி புகழ் பாட நினைத்தால்
தமிழ்,அன்னை என்னை வாரி அணைத்தாள்
உன் நினைவு இல்லாமல், ஒரு வரியும் பிறக்கதே
கவியே நீ சொல்லாமல், கவிதை சுனை சுரக்கதே

என் வரிகளுக்கு வாழ்த்தே இல்லை
உன் வாசிப்பொன்றே வாழ்த்தின் எல்லை

என் வரிகள் முழுதும் நீ தானே
என சொன்னாலும் , அது முறை தானே
நீ இல்லை , இல்லை என்றாலே
என் வரிகள் வெறும்பெரும் குறை தானே

" நெஞ்சமெல்லாம் உன் நினைவலை
எண்ணிட்டால் தோற்றிடும் கடல் அலை
எண்ணிட மறந்தாலோ (ஆழி ) பேரலை
என் நெஞ்சில் ஆழ் துளை ......

எழுதியவர் : ஆசை அஜீத் (20-Oct-14, 4:48 pm)
பார்வை : 202

மேலே