கவிஞன்

படைக்கும்
கடவுள்
பிரம்மாவின்
முதல் பாகம் - இவன்

அழகையும்
அழுகையையும்
அழகாய்
பிரித்தெடுக்கும்
அன்னப் பறவை

கனவுகளின்
ஊர்வலத்தை
கண் முன்னே
கொண்டு வரும்
கண்ணாடி - இவன்

தியாகத்தையும்
தீவிரவாதத்தையும்
திடமாய்
சொல்லிடும்
தின முரசு

சுதந்திர
வேட்கையில்
போர் முரசு - இவன்

பொங்கிடும்
அன்பினில்
தேனிலவு

வர்ணனை
என்பது
உயிர்மூச்சு - இவன்

வரிகளில்
வாழுது
மொழி காப்பு

எழுதியவர் : இசக்கி ராஜு வ (20-Oct-14, 8:36 pm)
Tanglish : kavingan
பார்வை : 43

மேலே