கண்டதும் காதல்

புகையிரதம் நகர்கிறது
ஜன்னல் வழியே நீல
வானைப் பார்க்கிறேன்
என் மனது போல் வானும்
வெறிச்சோடிக் கிடக்கிறது
ஒரு சில மணித்தியாலங்களுக்கு
முன் தாயின் அரவணைப்பில்
இப்போது வேலைத் தேடிச்
செல்லும் பயணி நான்
தாயில்லா தனிமை என்னை
வாட்ட கண்களை மூடிக்
கொண்டேன்
கனவா ? நிஜமா ?
மெல்லிசையோடு சலங்கை
ஒலிச் சத்தம்
கனவல்ல நிஜம்
கண்களைத் திறந்து ஒலி
வந்த திசை நோக்க
கண்கள் என் சொல் பேச்சு
கேட்க மறுத்தது
ஒருத்தி வந்தாள்
அவள் என் கற்பனைகளின்
ஒருத்தி
அவளுடன் மல்லிகை
வாசமும் வந்தது
இன்னும் என் கண்கள்
அவளை நோக்கி
அவள் கயல் கண்கள்
வானம் நோக்க நானும்
நோக்கினேன்
வெறிச்சோடிக் கிடந்த
வானில் பறவைகள்
தூரத்தே தவண்டு வரும்
கரும் மேகம்
வெறிச்சோடிக் கிடந்த என்
மனதை தேடுகிறேன்
என் மனம் என்னிடமில்லை
அங்கே பட்டாம் பூச்சி
பறக்கிறது
அவள் நிலா முகம் திருப்பி
என்னைப் பார்த்து ரோஜா
இதழ்களால் புன்னகைக்கிறாள்
என்னில் பதிலுக்கு புன்னகை
மெய்மறந்த புன்னகை
இது தான் கண்டதும் காதலா ?
இல்லை அழகான பெண்
கண்ட தடுமாற்றமா ?