vagupparai

பிடித்த சிலர்..
ரசித்த நொடி..
தவிழ்ந்து விளையாடிய நாட்கள்..
ஆறில் தொடங்கிய அரும்பு கனவுகள்..
பன்னிரண்டு வரை பட்டம் இட்ட பள்ளிக்கூட நினைவுகள்.. மீண்டும் பட்டாம்பூச்சியாய்...
சில நண்பர்களோடு வட்டமிட்டத் தினம்.. வாழ்க்கையின் மறு கரையோடு இணைத்தப் பாலத்தை மீண்டும் ஒரு முறை தூசி தட்டிய தினம்..
பழைய நண்பர்களோடு சிற்சில நிமிடங்கள்.. நெருக்கமில்லா நண்பர்களோடு நெருங்கி இருந்த மணித்துளிகள்... நட்பின் ஆழம் வானத்தை காட்டிலும் எல்லை இல்லாதது..
தூசி படிந்த கட்டிடம்.. "வருடம் ஒரு முறை இழந்தும் ஏற்றுக் கொண்டும் உயிர் பெறும்.. "
வெட்டப்பட்ட மரங்கள்..
பூட்டப்பட்ட சில கதவுகள்..
பொலிவு இழந்த பழைய நினைவுகள்.. உடைக்கப்பட்ட ஒரு சில வகுப்பு கதவுகள்..
சொல்லாமல் கண்ணீர் விடும் கட்டிடங்கள்..
பல வருட பாரம்பரியம் ஒரு சிலரின் இலாபத்திற்காக அடைக்கப்பட்ட பல ஆயிர மனிதர்களை உருவாக்கிய நினைவு சிற்பம் சிறிது சிறிதாக செதுக்கப்படுவதற்கு பதில் சிதைக்க படுகிறது.. நேற்று முளைத்த காளானுக்கு நிழலான நிஜம்..
இது அந்த மரத்தின் கிளையில் உதிர்ந்த இலையின் உதிர குமுறல்...
--இப்படிக்கு கவிதை பிரியன் சிவகுமார்

எழுதியவர் : சிவகுமார்.N (21-Oct-14, 9:42 am)
பார்வை : 360

மேலே