சந்தேகம்

@@@சந்தேகம் @@@

உன் மௌனம் கோபமென்று
நினைத்தேன் ...

வார்த்தைகளால் உணர்த்திவிட்டாய்
என் மேல் நம்பிக்கை இல்லையென ...

அன்றே விலகிருக்கலாமே ...
என் நட்புகள் மீதும் என் மீதும் சந்தேகமெனில்...

வருடங்கள் கடந்து உண்மையை
உணர்ந்த முட்டாள் நான் ...

என் பிழை தான் -உன்
கரம் பற்ற எண்ணியது....

உன் வார்த்தைகளை என் செவி
கேட்டதும் நின்றது என் இதய துடிப்பு மட்டுமே...

என் கண்ணீர் ...
என் வலிகள்...
இவை மட்டும் என் சொந்தம்...

ஆயுள் முழுவதும் உன் அன்பு
தொடருமென எண்ணினேன் ....

சந்தேக சாத்தான் உன்னில்
இருப்பதை உணராமல் ...

மன்னித்துவிடு .....
என் பயணம் என்றுமே
இனி உன்னை தொடராது....

எழுதியவர் : sagi (21-Oct-14, 1:12 pm)
பார்வை : 3684

மேலே