நியாயம்
![](https://eluthu.com/images/loading.gif)
அனுமதி இன்றி
அங்கம் தொடேன் பெண்ணே
மனமிறங்கி என்னை
மகிழ்விப்பாய்
என மன்றாடிய
ராவணன்
எங்கே
மாற்றான் கவர்ந்ததால்
கற்பில் களங்கம்
உண்டோ என
கலக்கம் கொண்ட
ராமன் எங்கே......
சல்லாப எண்ணத்தில்
பேதை சீதையை
கவர்ந்த ராவணன் கரம்
அவள்
தேகம் தீண்டவில்லை
ஆனால்
அழிக்கப்பட்டான்
சந்தேக எண்ணத்தில்
உத்தமி சீதையை
தீ குளிக்க வைத்த
ராமன் போற்றப்படுகிறான்.....
சல்லாப எண்ணம் கொண்டவன்
ஒரு நாள் திருந்தலாம்....
சந்தேகம் கொண்டவன்....??????