உன்னால் மரிக்கும் பூக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
நீ சிரித்ததால்
பொறாமையில்
நாண்டு கொண்டு மரித்தது
என் வீட்டில்
ஆசையாய் நான் வளர்த்த
ரோஜா பூ
தோழியே
இனியாவது - நீ
வரும் போது
புன்னகையை
உன் உதட்டின் விளிம்பில்
புதைத்து விட்டு வா
என் வீட்டிலுள்ள
மீதி பூக்களாவது உயிர் வாழட்டும்...
( தலைப்பு தந்து உதவியமைக்கு மிக்க நன்றி
சந்தோஷ் குமார் அண்ணா )