வகுப்பறை

அன்பை பரிமாறிக்கொண்ட அறை.!
ஆதவனையே கையில் காட்டிய அறை.!
இன்பத்தைக் கொடுத்த அறை.!
ஈகைப்பண்பை வளர்த்த அறை.!
ஞானத்தை போதித்த அறை.!
ஞாலத்தை உணர்த்திய அறை.!
நட்பை வளர்த்த அறை.!
நாகரீகத்தை உருவாக்கிய அறை.!
சண்டைகள் இல்லா அறை.!
சாதி வேறுபாடுகளைக் களைந்த அறை.!
அமைதியைக் கொண்ட அறை.!
ஆர்ப்பாட்டங்கள் நிறைந்த அறை.!
நல்ல தலைவர்களை உருவாக்கிய அறை.!
எங்களை ஊக்குவித்த அறை.!
வாழ்க்கையைக் கற்றுத்தந்த அறை.!
வாழ்வதற்கு வழிகாட்டிய அறை.!
வேறறைகளுக்கு இணையில்லாத அறை.!
காலத்தால் அழியாத எங்கள் வகுப்பறை..!

ச.வெங்கடேசன்(14-pb -053)
லயோலா கல்லூரி,நுங்கம்பாக்கம்,சென்னை-600 034.

எழுதியவர் : ச.வெங்கடேசன் (21-Oct-14, 7:52 pm)
பார்வை : 993

மேலே