திருவிழா

திருவிழா

எந்த ஒரு திருவிழாவிலும் ,, நம் சுற்றுப்புறத்தில் உள்ள நம்மை சார்ந்த அனைவரின் முகத்திலும் பூக்கும் புன்னகை அது மனதிலிருந்து பிறக்கட்டும்

இதுபோல திருவிழா தினங்களில் மட்டுமே இல்லாது இவ்வெண்ணம் எல்லா தினங்களிலும் உதயமாகட்டும்,,

பெரும்பாலும் தீபாவளி தமிழர் திருப்பண்டிகை இல்லை எனினும் இந்தியா அளவில் விமரிசையாகக் கொண்டாப்படும் பண்டிகையாகும், இன்று மக்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக மாறியிருக்கிறது எனலாம்,, கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் வீடுகளிலும் இன்று அவர்களுக்கான அன்றாடத் தேவையை நிவர்த்தி செய்துக்கொள்ளும் அளவிற்கு மக்களின் வாழ்க்கைத் தரம் நன்றாகவே மாறியிருக்கிறது ,, 50 சதமானம் ஆனாலும் நம் சுற்றத்தில் வாழும் இன்னும் சிலரின் நிலை இன்றளவும் ஒரு திருவிழாவை முழுமையான மனதுடன் கொண்டாட முடியாத நிலைதான் நீடிக்கிறது ,,,

அப்போது எல்லாம் நம்ம புதுத் துணி வாங்கிட்டு வந்தம்ன்னா ,, அதை வாங்கிட்டு வந்ததைவிட ,, அக்கம் பக்கத்து வீட்டாளுங்ககிட்ட காமிச்சு அதோட வெலய சொல்லி ஆனந்தம் பெருமைப் பட்டுக்கறதையே பெரிதாக நினைப்போம்,,அதைக்காணுகின்றவர்களில் யாரோ சிலருக்கு அந்த வருட தீபாவளி ஒரு கனவாக மட்டுமே இருக்கும்,

ஆம்

"பிணி அரக்கன் மோகிப்பித்து குத்தும் அவனின் இயலாமை என்னும் அதே புண்மேல் டாம்பீகம் எனும் குசலாட்டப் பேச்சுகளும் ஈட்டியாய்ப் பாய்கின்ற அத்தருவாயை அன்று நம்மில் எத்தனைப்பேர் உணர்ந்திருப்போம் என அறிந்திருக்கவில்லை"

ஆமா அன்றைய நிலையில காசுள்ளவன் வீட்டுக்குத்தான் திருவிழா அடிபணியும் அடிமையாகும் என்கின்ற காலகட்டத்தில் நம் பக்கத்து வீட்டுக்காரன் அவன் குடும்பத்துடன் பட்டினிக் கிடப்பதைக் குறித்து நாம் ஆலோசித்திருக்கமாட்டோம்

இன்னைக்கும் நம்மை சுற்றியுள்ள சில இடங்களில் இந்நிலை இருக்கலாம்,, உறவுகளே

பங்கிட்டு மகிழுங்கள் ,, அப்பா வெளிய போயிருக்காரு புது துணியும் பட்டாசும் கம்பி மத்தாப்பும் வாங்கியாருவாரு என்று விளக்கற்ற வீதிநோக்கி விழித்திருக்கும் அக்கம்பக்கத்து வீட்டாரின் குழந்தைகளுடனும் ,, நாளைய தீபாவளியை எப்படி கழிக்கப் போகிறோம் என எவ்விதத்திலும் முடியாமல் உழன்றுக் கொண்டிருக்கும் மனங்களுடனும்,, உங்கள் தீபாவளியை
இன்றொரு நாள் பங்கிட்டு மகிழுங்கள்,, காத்திருக்கும் அக்குழந்தைகளின் ஆசைகள் "புஷ்வானம்" விட்டது போலாகிடாமல்
இருக்கட்டும்,,

அப்போ எல்லாம் எங்க ஊருல பஞ்சம் வந்தப்போ,, தேயிலை விலை கிலோவுக்கு 2 ரூவாய் ஆகிப்போன மோசமான காலம் ,,நீலகிரியில பலக்குடும்பமும் பஞ்சத்துல தற்கொலை செய்துகொள்ளும் நிலையை எட்டிய காலம்,, சிலர் நீலகிரியைவிட்டு வெளியேறினர் ,, எங்கோ சென்று பஞ்சம் பிழைத்துக்கொள்ள ,, வயிறு கேக்கணுமே ,, அப்போ யாரையுமே விட்டுக்கொடுக்க மனம் இல்லை,, அதிகம் இருக்கிறவங்க ,,, ஆவரேஜ் அஹ இருக்கிறவங்க ,, கொஞ்சமா இருக்கிறவங்க அண்ட் ஒண்ணுமே இல்லாதவங்க எல்லாருமே தங்களுடைய வீட்டில என்ன இருக்கோ கொண்டு வந்து ஒண்ணா போட்டு சமைச்சு ,, மூணு வேளை சாப்பிட முடியாது அத்தனைப்பேரும் அம்மன் கோயில் திடல் ல ஒருவேளை திருப்தியா சாப்பிட்டா ,, மறுவேளை விஞ்சியதை உண்போம் ,,அதிலும் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தான் முதலிடம் வழங்குவோம்,,,அதுவும் இதுபோல தீபாவளி சமயத்துல ,,தீபாவளிக்கிருமழை,, பயங்கரமா அடிக்கும்,,மின் தடங்கல் வேறே (கரெண்டு போயிடும்) ,, நிலைமாறுமா என்ற கட்டம் இன்று கொஞ்சம் மேலேறியது ,, ஊருல எல்லாம் கம்பரா வீடுகள்(லைன் வீடுகள்) தான் பக்கத்துவீட்டுக் காரனை பட்னியில் ஆழ்த்திவிட்டு,, அவன் வீட்டு உலையில் தண்ணீர் கொதிக்கின்ற சப்தத்தை மட்டுமே காதால் கேட்டுவிட்டு ,, நம்ம எப்படி நிம்மதியா இருக்க முடியும்,, அப்படிப்பட்ட நாட்கள் ல ஒரு பண்டிகைத் திருவிழாவை நாம் மனதார எப்படி கொண்டாட முடியும் ,, ம்ம்,, பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பி வாழுதலே வாழ்வின் தொகுப்பு என இருத்தலே "சார்ந்து வாழுதல்" என்பதற்கான அர்த்தம் அல்லவா ம்ம் :)

இல்லையேல் மனிதம் வாழுகிறது என்று பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை

இன்றைய தீபாவளி அனைவருக்கும் சிறக்கட்டும் :)

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (22-Oct-14, 1:49 pm)
Tanglish : thiruvizaa
பார்வை : 607

மேலே