திருமந்திரம்

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயினும் நல்லன் அணியன்நல அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.--திருமூலர்

தீயைவிட வெப்பமானவன்; புனலைவிட குளிரானவன்; இருந்தாலும் அவனுடைய அருளை முழுதாக அறிந்தவர்கள் இல்லை. நம் மனங்களுக்கு எட்டாதவனாக தெரிந்தாலும் நல்லன்பர்களுக்கு என்றும் நன்மை செய்பவன்; தாயினும் நல்லவன்; தாழ்ந்த திருச்சடையுடைய ஈசன்.

எழுதியவர் : சுடரோன் (22-Oct-14, 7:31 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 122

மேலே