கோழையாய் நான்
உன் கண் பார்த்து
நேரம் போக வேண்டும்..
நீ மழையில் நனைந்து மழையை ரசிக்கும் போது
உன் அழகில் நனைந்து உனை நான் ரசிக்க வேண்டும்….
நீ ரசிக்கும் அனைத்தையும் நான் ரசிக்க வேண்டும்…
நீ சாய என் தோள் கொடுக்க வேண்டும்…
நான் சாய உன் தோள் வேண்டும்…
பூக்களும் இலைகளும் உதிர்ந்து
சாலையை மெத்தையாக்க
காலார உன் கைகோர்த்து நடக்க வேண்டும்..
நண்பர்கள் நம்மை ஒன்றிணைத்து
கேலி பேசும் போது புறத்தில் பொய் கோபம் காட்டி
அகத்தில் ரசித்து மறைக்க தெரியாமல்
நீ விடும் இதழோரப் புன்னகையை நான் ரசிக்க வேண்டும்…
இப்படி என் விருப்பத்தை உன்னிடம் சொல்ல தெரியாத
கோழையாய் நான்