தீபாவளி வாழ்த்துக்கள்

நேற்று
பரபரப்பு பிரயாணங்கள்
பத்தாத புத்தாடை தேடல்கள்
பல்வரிசை பலகாரங்கள்
சத்தமிடும் பட்டாசுகள்
அலைமோதும் கூட்டங்கள்
வாழ்த்தும் கைபேசிகள்
களைப்பறியா வெட்டிபேச்சுகள்
இரவை நீட்க ஏங்கும் ஒரு கண்கள்
பகலை எதிர்நோக்கும் மறு கண்கள்
கணநேர தூக்க கனவுகள்
இன்று
எண்ணெய் நீர் குளியல்கள்
மஞ்சள் மங்கள புத்தாடைகள்
இடைநிலையில் கடவுள் பக்திகள்
எச்சிலூறும் தின்பண்டங்கள்
இதழ்கள் வலி பொறுக்கும் புன்னகை உறவுகள்
கன்னி வெடிகளில் வெடிக்கும் காளை மத்தாப்புகள்
விளம்பர இடைவேளையில் படக்காட்சி தொலைக்காட்சிகள்
வானத்திற்கு வாழ்த்து அனுப்பும் ராக்கெட் வெடிகள்
இரவை மெருகேற்றும் அரைநொடி விண் நட்சத்திரங்கள்
ஆஹா...!! தித்திக்கும்...!! தீபாவளி நல்வாழ்த்துக்கள்