புதியதோர் உலகம்

யுத்தம் இல்லாத பூமி
சத்தம் இல்லாத அருவி
முத்தம் இல்லாத காதல்
துக்கம் இல்லாத வாழ்க்கை
ஏக்கம் இல்லாத அன்பு
தேக்கம் இல்லாத அறிவு
உவர்ப்பு இல்லாத கடல்
இனிப்பு மட்டுமே கலந்த கண்ணீர்
பசிப்பிணி இல்லாத மானுடம்
அடிமைத்தனம் இல்லாத அகிலம்
அழுகுரல்கள் கேட்காத அண்டம்
மழலை குரல்கள் மட்டுமே கேட்கும் மகிழ்ச்சி பூங்கா
மாற்றுத்திரனாளிகளாக
எவருமே பிறக்காத எதிர்காலம்
மாற்றுப்பாலினத்தில் பிறந்த
எவரையும் மதிக்கும் மதி வேண்டும்
பாலியல் வன்கொடுமை இல்லாத பார் வேண்டும்
மழைக்கு ஏங்காத உழவன் வேண்டும்
வறுமையில் வாடாத கிழவன் வேண்டும்
சகோதரத்துவம் போற்றும் சமத்துவம் வேண்டும்
உறவுகள் உறவாடும் உலகம் வேண்டும் - அது
உளவாளிகள் இல்லாத உலகமாய் இருக்க வேண்டும்
நண்பர்கள் மட்டுமே நடமாடும் உலகம் வேண்டும் - அது
நரிகள் நடமாடாத உலகமாய் இருக்க வேண்டும்
தீண்டாமையை கொளுத்துகின்ற அறிவு தீ வேண்டும்
அறியாமை இருள் இல்லாத உலகம் வேண்டும்
சிரிக்கின்ற சிலைகள் வேண்டும் - எல்லோரும்
சிந்திக்கின்ற சீர்திருத்தவாதிகளை இருக்க வேண்டும்
பொய்மை இல்லாத வாய்மை வேண்டும்
தூய்மை உள்ள நேர்மை வேண்டும்
தாய்மை போற்றும் ஆண்மை வேண்டும்
மலட்டுத்தன்மை இல்லாத மண் வேண்டும்
கண்ணீர் இல்லாத தேசம் வேண்டும்
அனாதைகள் இல்லாத அன்பு இல்லங்கள் வேண்டும்
அன்பு உள்ளங்கள் மட்டுமே வேண்டும் - மொத்தத்தில்
மறுபிறவியில் மனிதநேயம் போற்றும்
மனிதனாய் பிறத்தல் வேண்டும்