இன்னைக்கு என்ன பரபரப்பு நியூஸ்

இன்னைக்கு என்ன பரபரப்பு நியூஸ்...?
-
சரவெடியில் ஒரு வெடி வெடிக்காததுக்காக
யாரோ ஒருத்தர். நுகர்வோர் கோர்ட்டிலே பட்டாசுக்கடைக்காரர்
மேலே கேசு போட்டிருக்கிறார்...!
--
-கவுதமன்
-
-------------------------------------------------
-
என்ன சொல்கிறாய், நம் மன்னருக்கு ஒரு லட்சம்
பாலோயர்ஸ் இருக்கிறார்களா..?
-
ஆமாம், போரில் இருந்து நம் மன்னர் புறமுதுகிட்டு
ஓடிவரும்போது, படை வீரர்கள் அத்தனை பேரும்
மன்னரை ஃபாலோ பண்ணி வந்து விடுவார்கள்...!
-
--கொளக்குடி சரவணன்
-
-----------------------------------------------
-
வெடியைப் பார்த்து அம்மா ஏதோ பேசிட்டு
இருக்காங்களே..?
-
தெரியாதா...அவங்க பேசியே பத்த வெக்கிறதிலே
கில்லாடி
ஆச்சே...!
-
--கவுதமன்
-
----------------------------------------------------
-
அந்த பேஷ]ஃடுக்கு ஆபரேசனை கேன்சல் பண்ணீட்டீங்களே
ஏன் டாக்டர்..?
-
அவன் அஞ்சு பிள்ளைக்கு அப்பனாம்...! காப்பாத்துங்க
டாக்டர்னு கெஞ்சுறான்...நான் என்னஅத்தனை கல்
நெஞ்சுக்காரனா...?
-
--முகம்மது யூசுப்
-
-------------------------------------------------------
-
பைசா கோபுரம் சாய்ஞ்சு இருக்கும், ஆனா அது இன்னும்
விழலை, ...இது நேராத்தானே இருக்கு, எப்படி விழுந்தது?
-
இது பைசா பெறாத பில்டிங்....!
-
--கிணத்துக்கடவு ரவி
-
----------------------------------------------------
-
நன்றி: ஆனந்த விகடன் - தீபாவளி மலர் 2014

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (24-Oct-14, 9:25 am)
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே