திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம்
உங்க அபார்ட்மென்டில் யாரும் வெடி வெடிக்க
கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு இருக்கீங்களாமே..?
-
ஆமாம்...இடிஞ்சு விழுந்துடுமோன்னு பயமா இருக்கு...!
-
--விகடபாரதி
-
-------------------------------------------------------
-
தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன்
பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?
-
பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு
ஊதறாங்க...!
-
முகம்மது யூசுப்
-
------------------------------------------------
-
உங்க ஆபிசுலே எத்தனை பேர் வேலை செய்யுறாங்க...?
-
எத்தனை பேர் சம்பளம் வாங்கறான்னு கேளுங்க, சொல்றேன்...!
-
--ரிசிவந்தியா
-
---------------------------------------------
-
தலைவர் ஏன் திடீர்னு மராத்தி ஒழிப்பு போராட்டம்
நடத்தறார்...?
-
கட்சியில இருந்த வடநாட்டு நடிகை, அவரை மராத்தியிலே
திட்டிடுச்சாம்...!
-
--கி.ரவிக்குமார்
-
------------------------------------------------------
-
புதிதாக திருமணம் செய்து கொண்ட அண்டை நாட்டு
மன்னன், நம் நாட்டு மீது படையெடுத்து வருகிறானாம்...!
-
தீபாவளியும் அதுவுமா இப்போ எதுக்கு...?
-
ஆயிரம் தலை வாங்கி, தீபாவளி கொண்டாடப் போகிறானாம்...!
-
--கோவி.கோவன்
-
----------------------------------------------------------
நன்றி: ஆனந்த விகடன் - தீபாவளி மலர் 2014