விழித்திடு தோழா
கிணற்று தவளையா இருந்தாலும் சரி
கீச்சல் சத்தம் ஊரை எழுப்பட்டும்
கருகி இருப்பதாக எண்ணாதே
கருவேலன் முள்ளகாக நினை
கை ஒடிந்த நாணல்
காற்றையும் தாங்கும் , காட்டாரையும் தாங்கும்
துரும்பு என்று நினைத்தால்
இரும்பு துரும்பாக நினை
மரம் என்று நினைத்தால்
வேங்கை என்று நினை
வெறும் கை என்று நினைக்காதே
ரேகைகள் அழிந்துவிடும்
விழித்திடு தோழா
வேடிக்கை காட்டுவது உனக்கு இல்லை
வேதனை ஒழியும் வரை விழித்திரு !!!!

