அம்மாவுக்கு ஒரு கவிதை
உனக்கு வலி கொடுத்து
பிறந்த காரணத்தால் தானோ
என்னவோ...?
எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம்
உன்னையே அழைக்கிறேன்
அம்மா என்று...
என் விழிகளினால் அழுதிட
இதழ்களினால் சிரித்திட
இமைகளினால் உறங்கிட
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு
நான் வாசித்த முதல் கவிதை
"இறைவனால் படைக்கப்பட்ட
என் இனிய தேவதை நீ அம்மா ...