அடிமைகள்

என் நாடு தள்ளாடுகிறது
எங்கும் வீழ்ந்துகிடக்கும்
வீதிகள் எங்கும் விவேகம்
துலைத்த விவேகானந்தர்கள்
திரிகிறார்கள்
பண்பாடு மறந்து
பரதேச மோகத்தில் திரிகிறார்கள்
லட்சியங்களை துலைத்து
லட்சணமானவர்களை தேடி திரிகிறார்கள்
வேஷதாரிகளின் பின்
கோஷமிட்டு திரிகிறார்கள்
நடிப்பவனின் பின்
படித்திருந்தும் திரிகிறார்கள்

என் நாடு சுதந்திரம்
வாங்கவில்லை
என் நாடு அடிமைகளை
வைத்துக்கொண்டு வல்லரசு
கனவு காண்கிறது
என் நாடு போதைகளை
சுதந்திரமாய் அனுமதிக்கிறது

இங்கு குடி குடியை கெடுக்கும்
என்பது அரசால் அச்சிடபட்டு விற்கபடுகிறது
கவர்ச்சிகளை காட்டும்
தொலைகாட்சியும்
நாளேடுகளும் எங்கும் இருக்கிறது

மதுவிற்கும் மாதுவிற்கும்
இளமை அடிமைகளாக்கபடுகின்றன
நடிகனுக்கும் நடிகைக்கும் கோவில்கள் கட்டபடுகின்றன
காசிற்கு கல்வி விற்கபடுகின்றன
அரசியல் என்பது இருகட்சிகளுக்கு
மட்டும் சொந்தமாக்கபட்டுவிட்டன
இங்கே அனைத்திற்கும்
அடிமைகளாக நாங்கள்

எழுதியவர் : கவியரசன் (24-Oct-14, 8:44 pm)
Tanglish : adimaikal
பார்வை : 466

மேலே