மரணங்களின் மறுவடிவம்
மெல்ல
தூக்கத்துக்குள்
படர்வது, சாவது.....
சாக சாக
தெரிகிறது
தூக்கம்....
மரணம் ஒன்றும்
வலியல்ல
தூக்கம் வராதவன்
விழிகளில்....
வர்ணமற்ற வெளியில்
வாகை சூடும்
காற்றில்
புல்லாங்குழல் ஆவது.....
வாசிப்பவன்
தீர்வதேயில்லை
வசியங்களின் தேவைகளில்
தாழிடாத கதவுகள்
திறந்தே கிடக்கின்றன.....
தூரம்,
வெகுதூரம்
சில்லிட்ட பாதைகளில்
தேநீர் கிடைக்காமல்
கடவுள்......
மரணங்களின் மறுவடிவம்
அவனென்றால்
இருக்கட்டுமே
இந்த
மரணம் என்ற
தூக்கம்....
கவிஜி