மரபினை மறந்த மனிதமும், மாக்களும்

மரபுவகை உணவு தாம்-நாம்
மறந்துபோன தினை, கம்பும்

கேழ்வரகும் கேட்பாரற்று போனதுவாம்
நம் கலாச்சார கலப்படத்தால் !

கம்மன்சோற மறந்த நாமும்
கண்ணாடியை நாடினோம் !

எள்ளையும் கொள்ளையும்
ஏற்க மறுத்து -பெருந்
தொந்தி பெருத்து போகினோம் !

கீரையும் நாரையும்
சுவைக்க மறுத்து -இரத்த
விருத்தி யற்று போனோம்!

முளைவிட்ட தானியத்தை
தின்ன விரும்பாமல்
தின்பண்டம் தேடி போகினோம் !

பர்கரையும் பீட்ஷாவைஉம்
நாக்கு ருசிக்க தின்னு -நல்
தானியத்தை மறந்து போகினோம் !


இளநீரை பருக மறந்து -பன்றி
இறைச்சி தேடி போகினோம் !

பனங்கற்கண்டை விட்டுவிட்டு
பரோட்டாவை ருசித்து மகிழ்கிறோம் !

மணத்தக்காளியை மறந்து விட்டு
மருந்து வாங்கி விழுங்கினோம் !

வாழைப் பூவின் துவர்ப்பை வெறுத்து
வேகாததை தின்கிறோம் !

நூல்கோலை வெறுத்து நாமும்
நூடுல்ஸ் ருசிக்க உண்கிறோம் !

முட்டைக் கோசை தின்ன வெறுத்து
முட்டைக் கருவை வேண்டி
விரும்பி சுவைக்கிறோம் !

மனிதம் மாறி போக
மாக்கள் என்ன செய்யும் !

தவிட்டை விட்டுவிட்டு
தழைஇலையை மறந்து துறந்து
புண்ணாக்கையும் புறம் தள்ளி
புற்பூண்டுகளை தேடிச் சென்று
போஸ்டரையும் கிழித்து தின்று
பொய்யாய் வாழ்க்கை நடத்த
பழகிக் கொண்டதாமே !

தீவனத்தை மறந்து
தெருத் தெருவாய்
திரிந்து தினம் காகிதத்தை
உண்டு காலம் கழிக்க மாவும்
கண்டு கொண்டதாமே !

உரிமையாளன் வந்து
பாலைக் கறந்து கொண்டு
தெருவில் விடுவான் மாட்டை
மடியை நிரப்ப தானே
வழியில்லாமல் போக
தனி வழி ஒன்றைக்
கண்டு கொண்டதாமே !

நெகிழிப் பையைத் தின்று
நெஞ்சில் அடைத்து கொண்டு
மூச் சடைத்ததாலே
மாண்டு போகும்
மாக்கள் !

செயற்கை இறைச்சியாலே
விரைவில் பருவமடையும்
பெண்கள் பக்க விழைவோடு
நிதம் நாளைக் கடத்தறோமே!

குழந்தையின்மையாலே குமுறி
அழும் பெண்கள் நிதம்
கொடுமைகளை நினைத்து
நெஞ்சு நோகிறார்கள் !

முடியுதிர்வை தடுக்க
கருவேப்பிலையை மறந்து
கரும் சாயம் தேடிச் சென்று
கண்ணைக் கேடுக்கிறோமே!

மூலிகையைத் தின்று
முடிவில்லாமல் வாழ
வழி தெரிந்தும் நாமே
வாழ்வைத் தொலைக் கிறோமே !

நோயின்பிடியில் மாந்தர்
நோ சொல்லாமலேயே
மாட்டிக் கொள் கிறோமே !

உண்டு உறங்கி தினமும்
உடற் பயிற்சி இன்றி
உயிர் துறக் கிறோமே !

இவை யனைத்தும் மறந்ததாலே
இளந்தலைமுறைக்கு கேடே
இதைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம் !!
நம் தப்பைத் திருத்தி கொள்வோம் !

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (24-Oct-14, 11:11 pm)
பார்வை : 92

மேலே