ஓவியம் சொல்லும் காவியம்
ஓவியனும் கவிஞனும்
சிறைப் பிடிக்கும் கற்பனைகள்
காட்சிக்கூடத்தில் கலைவிளக்கும்
கதை படிக்கும் சிந்தனையை சிறகடிக்கும்
படைப்பின் தத்துவம் தான் என்னே/
முடிசூடா மன்னர்கள் கலை உலகில் இவர்களே
தத்ரூபம் ஓவியத்தில் தனை விளக்கும்
காவியத்தில் கவிநயத்தில் ஒப்பில்லா கற்பனைகள்
கனிந்து வரும் பொழிந்துவரும்
இதுவல்லோ ஓவியமும் காவியமும்
எடுத்தியம்பும் எழில் வளமும் கற்பனையும்
ஒப்பற்ற கலை வளமும் அமைகின்ற
பொருள் சொல்லும் காவியமும்
ஓவியத்தில் காண்கின்றோம் ஓவியனின்
சிறகடிக்கும் சிந்தனையில்
சித்தரிக்கும் ஓவியத்தில் காவியங்கள்