என் பேனாவின் ஏளனம் - சந்தோஷ்

கையூட்டு வாங்கிய
அதிகாரியை
கை நீட்டி காப்பாற்றினார்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி..!

-*-

கவுன்சிலரின் (அ)லட்சியம்
எங்கள் தெருவில்
சாலையெங்கும்
மழைநீர் சேமிப்புத்தொட்டி..!

-*-

அரிய வாய்ப்பு...!

உலக தமிழர்களை
முதுகில் குத்தி கொல்லுங்கள்...!
நீங்கள்
அந்நிய தேசத்து காட்டுப்பன்றியென்றாலும்
எங்கள் பாரத தேசத்தின்
பாரத ரத்னா காத்திருக்கிறது.
(ஆ)சாமியின் அருளோடு..!

-*-

பருவத்திற்கு வரவில்லை
ஆடையில் ஆபாசத்திற்கு வாய்ப்பில்லை
மாரப்பு போடவும் வயதில்லை.
கயவனே..! நீ எச்சிலொழகிட கூட
கொங்கைகளும் இல்லா குழந்தையடா அது..!

அற்பனே!
வெறும் காமச்சுகத்திற்கு
பெற்றெடுத்த சதைப்பன்றிகளின்
மகனே...!
நீ புத்திக்கெட்ட பன்னி...! -உன்
திமிர்ப்பிடித்த **னிக்கு
அரிப்பென்றால்
நாக்கு நீட்டித்திரியும்
அந்த நாக-பாம்பின்
புற்றிலுள்ள பொந்தினை
நாடி, இச்சையேற்றியுன்
காமப்பித்ததினை ஆற்றிக்கொள்..!
இல்லையேல்
உன் *** ****************************


-*-

இவ்வாறு
சினங்கொண்டு எழுதினால்
என் பேனாக்கூட
என்னை ஏளனமாய்
கேட்கிறது.
“ இப்படி இப்படி
அனலாய்
ஆக்ரோஷமாய்
எழுதுவதை தவிர

உன்னால்
உங்களால்
என்ன கிழித்திடமுடியும்? “

--------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (25-Oct-14, 2:33 am)
பார்வை : 171

மேலே