+நினைவுகளும் பாடல்களும்+

உறக்கம் வராமல் தவிக்கும்
மனதிற்கு ஆறுதல்
நினைவுகளும் பாடல்களுமே...

இது
விடுதியில் தங்கியிருக்கும்
மாணவர்களுக்கும் பொருந்தும்...

வெளிநாட்டில் தனித்திருக்கும்
நெஞ்சங்களுக்கும் பொருந்தும்...

இது
காதலனுக்கும் பொருந்தும்
காதலிக்கும் பொருந்தும்
காதலுக்கும் பொருந்தும்

இது
கவிஞனுக்கும் பொருந்தும்
கலைஞனுக்கும் பொருந்தும்

இது
எல்லையில் நாட்டைக்காக்கும்
வீரனுக்கும் பொருந்தும்

கிராமத்தில் வியர்வைசிந்தும்
உழவனுக்கும் பொருந்தும்

நினைவுகளுடனும் பாடல்களுடனும் நானிங்கே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Oct-14, 11:53 pm)
பார்வை : 314

மேலே