பிரியாமல் வாழ்வோம்

உறவு என்று நாம்
உரிமையாக வில்லை
பந்தம் என்னும்
சொந்தத்தில் பலமாக
இணைந்தோம்...!!!

சொந்தத்தை
வளர்த்தோம்
பிரியாமல்
வாழ்வோம்..!!

உணர்வாலும்
உணர்ச்சியாலும்
அன்பாலும்
இன்ப துன்பத்திலும்
உதவுவோம் பக்க பலமான
உறவு என்று உலகுக்கு
உணர்த்துவோம்...!!!

தோள் கொடுப்பேம்
இறுதி ஊர்வலத்தில்
மட்டும் இல்லை..!!

சோகம் கொண்டு
துவண்டு விடும்
வேளையிலும்..!!!

நாடு விட்டு நாடு
சென்றாலும்
நாகரீக வாழ்வை
நோக்கிச்
சென்றாலும்.
நாட்டுப் பற்றை
நாம் மறக்காது
நினைத்திருப்போம்..!!

மழலைப் பருவ
நட்பையும்
தெப்பக் குளக்
குளியலையும்
மனதில் ஓட
விட்டு ரசித்துப்
பார்ப்போம்..!!

உடல் பிரிந்து
தொலை தூரம்
வந்த பின்னும்
உணர்வால்
நட்புக்களைப்
பிரியாமல்
வாழ்வோம்..!!

பிரிவு என்பது
வாழ்வில் ஒரு
அங்கம் அதை
பட்டா போட்டு
அமர விடாமல்
விரட்டவே மனதில்
உள்ள அன்பு என்னும்
அதிகாரியால் மட்டுமே
முடியும்..!!

பிரிவு வரட்டும்
நாம் பிரியாமல்
வாழ்வோம்
உடலை விட்டு
உயிர் பிரியும் வரை
சொந்த பந்தங்கள்
நட்புக்களையும்
நினைவாலும்
உணர்வாலும்
பிரியாமலே
வாழ்வோம் ...!!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (25-Oct-14, 3:22 pm)
பார்வை : 176

மேலே