உதவுவோம் கல்விக்காவும்

@@@வறுமை @@@

படிக்க நினைக்கும்
குழந்தைகளுக்கு படிப்பு
கிடைக்கா கனியாகி விட்டது...

படிப்பு இன்று
விலை பேசப்படும் ஒரு
கருவியாகி விட்டது ...

பணம் இருந்தும் உதவும்
எண்ணம் இல்லா மாந்தர்க்கோ
எண்ண முடியாத அளவு பணம் ...

மனம் முழுவதும் படிக்க
நினைக்கும் குழந்தைகளுக்கோ
எண்ண முடியாதளவு வறுமை ...

தன்னிடம் கொட்டி கிடக்கும்
செல்வங்களை எளியோர்க்கும்...

கல்விக்கு ஏங்கும் குழந்தைகளுக்கும்
தர மனம் இருப்பதில்லை ...
வசதி கொண்ட மாந்தர்கள் ...

மானிடா !

உணர்ந்து விடு .....

இப்புவியில் நிச்சயம் அனைவரும்
ஓர் நாள் இந்த மண்ணிற்கு சொந்தம் என்பதை ...

செல்வங்கள் அனைத்தும்
நம்முடன் வந்து உறங்க போவதில்லை
இந்த மண்ணில் ...

உதவும் குணம் இருந்தால்
நம் நாட்டில் வறுமை ஆட்சி செய்யாது ...

இந்தியர்கள் என அனைவரும்
பெருமை கொள்கிறோம் ....

வறுமை ஒழிய மட்டும் யாரும்
முயற்சி செய்வதில்லை ...

கல்வி என்று சராசரியாக அனைவருக்கும்
கிடைக்குமோ அன்றே நம் நாடு
முழுமையாக முன்னேற்றம் அடையும்...

கல்விக்கு ஏங்கும் குழந்தைகள்
நம் நாட்டில் ஏராளம் ...

அழியாச்செல்வம் கல்வி மட்டுமே ...
அனைவருக்கும் கிடைக்க முயற்சி செய்வோம் ...

பெண்ணிற்கும் தன்னம்பிக்கை தரும்
கல்வியை மேலும் வலுவடைய
முயற்சி செய்வோம்.....

எழுதியவர் : சகிமுதல்பூ (25-Oct-14, 7:00 pm)
பார்வை : 268

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே