காதல் என்னும்

திருமணம்
எனும் பெயரால்
இருவரல்ல
ஒருவரெண்டு
இன்றுதான் அவர்கள்
பத்திரத்தில்
பதிந்து விட்டனர்!

பாவம் அவர்களும்
அவர்களின் சட்டமும்
என்றோ...
நீயும் நானும்
குத்திக்கொண்டோம்
காதல்
என்னும் புனிதத்தால்
ஒற்றைப் பிறவிகள்
என்னும் முத்திரையையும்!

இதயத்தில்
போட்டுக் கொண்டோம்
மரணம்
நிகழும் வரை
உடையாத விலங்கையும்.

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (26-Oct-14, 12:03 pm)
Tanglish : kaadhal ennum
பார்வை : 105

மேலே