காதல் ஏக்கம் என்னவனுக்காக -----ப்ரியா

எத்தனையோ பேர்
காதல் உரைக்க
அத்தனையும் வேண்டாமென
என்மனம் நிராகரித்ததென்னவோ
உனக்காகதானோ.....?

உன் உதடுகள் எப்பொழுது
காதல் கவி பேசும்
என்ற ஏக்கத்தில்
என்உறவுகளை வெறுத்து
தனிமையை தேடியது
என் தவறோ.....?

உன் கண்கள் காதலை உணர்த்த
உதடுகள் காதலுடன் புன்னகைக்க
என் இதயத்தில் உன்னை ஏற்றி
அதை உனக்கு பரிசளித்தது
யார் தவறோ....?

ஒட்டிய உறவையெல்லாம்
உதிர்த்து ஓர் உறவாய்
உன்னை மட்டும் வைத்து
நேரம் போக்கியது ஏனோ.....?

நீயே என் உலகம்
நீயே என் உயிர்
என் உறவின் மொத்த உருவமும்
நீயே என பெருமைப்பட்டுக்கொண்டது
என் பைத்தியக்காரத்தனமா........?

உறவுகளை வெறுக்க வைத்து
தோழிகளையும் மறக்க வைத்து
தனிமையை விரும்ப வைத்து
நித்தமும் இனிமை தந்தது
உன் தவறா.....?

நீதான் நிரந்தரம் என ஏமாந்தது
என் தவறா....?

இறுதிவரை உன்னுடன் இருப்பேன்
என்னுயிரே நீதான் என்று
காதல் மொழிந்தாய் அன்று

அது காதலின் மயக்கமா?

இல்லை வயதின் கிறக்கமா?

என்று அன்று புரியவில்லை
இந்த பேதைக்கு.....!!!!!

இறுதிவரை உன்னுடன் இருப்பேன்
என்று மொழிந்துவிட்டு
இப்படி பாதியிலேயே என்னை
தவிக்கவிட்டு செல்கிறாயே
அன்பே இது நியாயமா.......?

அன்பே,செல்லமே,தங்கமே
என்று கொஞ்சிடவேண்டாம்
பரிசுப்பொருட்கள் ஒன்றும்
தந்திட வேண்டாம்.......

உன்னால் இழந்த சந்தோஷத்தை
உன்னாலே மீட்டெடுக்க.
நீ ஏற்படுத்திய
மனக்காயங்களுக்கு
நீயே மருந்திட மறுபடியும்
உன் காதலை எனக்கு
பரிசளித்துவிடு
கிடைக்குமென்ற நம்பிக்கையில்
உன் அன்புக்காக நான்.......!!!!!!

எழுதியவர் : ப்ரியா (26-Oct-14, 11:43 am)
பார்வை : 270

மேலே