பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புதையல் “ஆற்று வளம்”

நீர்வளத்தை தக்க வைத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உதவிவரும் ஆற்று வளத்தை காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, எங்கள் குழு எங்களுக்கு கொடுக்கப்பட்ட “காலநிலை மற்றும் தட்பவெட்ப நிலையைப் புரிந்துக் கொள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், “தட்பவெப்ப நிலை, காலநிலை ஆகியவற்றால் மானுட செயல்பாடுகளின் தாக்கம்” என்ற துணைக் கருப்பொருளின் அடிப்படையில் “ஆற்றின் மாற்றத்தால் பசுமையில் ஏற்பட்டுவரும் மாற்றம்” என்ற தலைப்பில் எங்கள் ஆய்வினை மேற்கொண்டோம்.

எங்கள் ஆய்வு பகுதியான கூத்திரமேடு ஊராட்சியில் எங்கள் குழு இருவழிமுறைகளில் ஆய்வினை மேற்கொள்ள தீர்மானித்து, முதலில் தகவல் சேகரிக்கும் பொருட்டு, 17 கேள்விகள் அடங்கிய வினாப்பட்டியல் ஒன்று தயாரித்து, அதன் மூலம் மக்களிடம் கேட்டு உரிய தகவல்களை குறித்துக் கொண்டோம். மக்களிடம் கேட்ட தகவல்கள் மற்றும் பொதுக் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நேரடியாக உற்றுநோக்கி, கிடைத்த தகவல்களை பதிவு செய்தோம்.

ஆய்வின் முடிவில் ஆற்றில் முற்காலத்தில் நீர் பாய்ந்தோடி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது. ஆனால், தற்போது ஆற்றில் பாய்ந்தோடிய நீர் தடைப்பட்டு வறண்ட நிலையில், மணல் கொள்ள பெரிதும் நடந்து வேகவதி ஆறு தனது செம்மைக்கு காரணமான மணலை பெருமளவு இழந்து காட்சியளிக்கிறது. அதனால் நீர்மட்டம் எண்ணிப்பார்க்க முடியாத ஆழத்திற்கு அதாவது, 92 அடிக்கு கீழ் சென்றுள்ளது. இதனால் கிணறுகளில் நீர் வற்றிய நிலையில் வேளாண் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகி மறைந்து வருகிறது. மேலும், மக்களுக்கு போதுமான அளவு குடிநீரும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். ஆங்காங்கே செங்கல் சூலைகள் உட்பட சில சிறுதொழில்களுக்காக ஆற்றுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு தீர்வாக நாங்கள் அறிந்தது, தட்பவெட்ப நிலை மாற்றம், இலாப நோக்கோடு, ஆற்று வளத்தை அழிக்கும் சில மனிதர்களின் தாக்கம், ஆற்றின் ஆக்கிரமிப்பு போன்ற செயல்பாடுகளில் ஆற்றின் பரப்பளவு குறைந்து, மணல்கொள்ளையால் ஆற்றின் நீர்;மட்டம் எண்ணிபார்க்க முடியாத ஆழத்திற்கு சென்றுள்ளது. இதனால் வேகவதி ஆறு சீரழிக்கப்படுவதுடன், அதனை சார்ந்த மக்களின் வேளாண் தொழில் மற்றும் வாழ்வாதாரங்கள் குறைந்து அல்லோப்படுகின்றனர் என்பது தெரியவருகிறது.

எனவே ஆற்றுவளம் என்பது நாம் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புதையல். ஆகையால் பொதுமக்களாகிய நாம், சில சமூக அமைப்புகளோடு ஒருங்கிணைந்து, ஆற்றுவளம் சூரையாடப்படும் பகுதிகளில் போராட வேண்டியது நம் கடமை. மேலும் ஆற்று வளத்தின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு வரும் அறிந்திருத்தல் வேண்டும். அறிந்திருப்பது மட்டும் நம் கடமை அல்ல. அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எழுதியவர் : கல்பனா சாவ்லா துளிர் இல்ல (26-Oct-14, 1:25 pm)
சேர்த்தது : A.K.ரங்கநாதன்
பார்வை : 468

சிறந்த கட்டுரைகள்

மேலே