காத்திருகின்றேன் உனக்காக

விழிகளில் வந்தாய்
காதல் தந்தாய்
வேண்டாம் என்றேன்
விலகிட மறுத்தாய்

உறவாக நீ வந்து
உயிராக என்னை வைத்தாய்
மறுத்திட முடியவில்லை
மனம் விரும்பியது உன்னை

கபடம் அற்ற உன் விழியில்
கருணை எனும் தெய்வம் கண்டேன்
காலமெல்லாம் உன் காலடியில்
வாழ்ந்திடவே வரங்கள் பெற்றேன் .

பெற்ற வரம் கிடைக்கும் முன்னே
பிரிந்ததென்ன நியாயம் தானோ .?
கன்னி என் கண்ணீரை
கனவில் எனும் காணீரோ..?

காலம் கடந்து செல்கிறது கண்ணா
காத்திருக்கின்றேன் உனக்காக ...!

எழுதியவர் : கயல்விழி (27-Oct-14, 8:30 am)
பார்வை : 149

மேலே