இன்பமே வழியட்டும் இதயத்தில்

நாடுவிட்டு நாடுவந்து நாணமோ நகர்ந்தநேரம்
நடைபாதை நடனம் நம்மராம்க்கு உகந்தநேரம் !
நதிக்கரை ஓரமென நர்மதாவும் எண்ணியதால்
நாணல்போல வளைந்தாடும் வண்ணமயிலாள் !
விடுமுறை நாளன்று விருப்பமாய் வெளியிலே
விடுப்பு வீட்டிற்கும் விட்டதால் இக்காட்சியோ !
விரையும் மாலைக்குள் விடியும் காலைக்குள்
விஞ்சிடும் துள்ளலும் பொங்கிடும் இன்பமும் !
அயல்நாடு சென்றாலே சுயமாக வாழலாமோ
அந்நிய தேசத்திலும் சுகமாக திரியலாமோ !
அக்தன்றி சாலைதான் இல்லையே இங்குமே
அகன்ற நடைபாதை ஏதிங்கே நடைபயிலவே !
உறவுகள் மறந்தாலும் உணர்வுகள் மறையாது
உலகிலே எவருக்கும் உள்ளவரை நியதிதானே !
உள்ளத்தில் துயர்கள் நிறைந்தே உறைந்தாலும்
உள்ளது தெரியாமல் வாழ்வதே உயர்வன்றோ !
இயன்றவரை இளமையில் இன்பமாய் வாழ்க
இயம்புகிறேன் என் அனுபவத்தின் வாயிலாக !
இன்பமே வழியட்டும் இதயத்தில் உங்களுக்கும்
இருநூறு ஆண்டுகள் வாழ்ந்திடுக வையகத்தில் !
பழனி குமார்
( படத்தில் உள்ள இருவரும் என் உறவினர்கள் )