கண்களால் தொடங்கும் என்று
என் கனவின் நகலெடுத்து
பெண் உருவம் தந்து
கவிதையாய் வர்ணித்து
காதல் கொண்டவுடன்
மௌனம் கொண்டிடுமே
தனிமை கொன்றிடுமே
என் இளமை கனவெல்லாம்
கானல் நீரானதே...
கண்களால் தொடங்கும் என்று
உன் கண்ணை தேடி நின்று
என் மனம் வாடுதடி
காதலுடன் உன்னை தேடுதடி

