பொட்டை ஏரியும் குளித்த நண்பர்களுமாய்
இமயத்தில் இருந்த பாறை
என்றுமது கற்பாறை
ஏரிமீது கடத்தப்பட்டு
எங்களுக்கு உபோயகபட்டு
துணிகளை வெளுத்திருக்கும்
துள்ளிகுதிக்கவும் உதவியிருக்கும்
அழுக்கடைந்த அரைகால் சட்டை
அங்கேயே விட்ட அக்காளின் திறமை
எடுக்கபோகவே என்னுடைய் குளியல்
இத்துடன் இருப்பதாய் கடந்திருக்கும்
வள்ளியாத்தா பாட்டிகையில்
வழுக்கிபோன சவுக்காரத்தை
எடுத்துத்தர எங்களுக்குள் போட்டி
இத்துடன் குளியல் முறை எத்தனையோ
காசங்கே கற்பாறையில் கொழகொழப்பாய்
களையெடுத்த எள்ளுசெடி கூலியாள்
அவசரத்தில் அலசும்போது
அதிலொன்று தொலைந்ததென்று
தேடித்தர திரும்பவும் குளியல்
திட்டவில்லை இதுவரையில்
கற்பாறையில் கன்னம் பாத்து
கணக்கற்ற முத்தம் வைத்து
உன்போல் உதவுவார் யாரோ
ஒருமுறையே தலைகீழ் தம்மட்டம்
அடிப்பதுதான் எங்கள் நண்பர் வட்டம்
அன்று ஏரிக்கு நாங்கள் வைத்ததே கொட்டம்
ஏரி இப்போ மாறி போச்சு
எனக்கும் இப்போ வயசும் ஆச்சு
பட்டா போட்டு ஏரி நிலத்தை
பங்கு போட சட்டம் ஆச்சு
கடந்த பாறை கடத்தி போக
களவு எனக்கு திட்டமாச்சு
புரட்டும்போது கற்பாறையில்
பொறித்த எழுத்து புரியலாச்சு
இமையம் கடைந்த இந்த பாறை
ஏரியில் நிலைத்திருந்தால் மேககூரை
மும்மாரி மண்ணில் ஒழுகிபோகும்
மூடிவிடாதே உங்கள் ஓட்டை
சட்டம் என்பது புண்ணியமாய்
சாவு என்பது மோட்சமாய்
திட்டம் போட்டு வாழ்ந்திடுங்கள்
தீர்ப்பை சொல்லவே நடுகல்லில்
குறையும்போது தண்ணீரெங்கும்
குடிமகனாய் நிறைத்திடுவாயோ
மதுவாய் நினைத்தால் மரணமுண்டு
மழையும் கூட நரகமென்று
வாழும்போது கிடைக்குமென்று
வருங்காலமுரைத்த ஞானியென்று
புரட்டிபோட்ட வராலாறு எதுவென்று
புலம்புகின்றேன் வருத்தத்தில் இன்று