நிலாக்குடிகாரன் குறும்பாக்கள்

'விடுதலையென்று எழுதிய'
ஒரு ஆணிக்கால் பேனா!
செருப்பை இழந்தது!

சிற்றுண்டிச்சிறையில் அடைபட்ட
ஒர சிறுமியின் பேனா
விடுதலை இழந்தது...

சட்டைபோடாத
கதிரவன்,
மாலை ஆனதும்
மாய்ந்து போனது
எல்லாம்!
(காந்தி )

கைகள்
நடக்கிறது
கள்ளிநிலத்தில்!!!
முள்ளின்எடை
எறும்புக்கு
வலிப்பதில்லை....!!!

தீயில் எரிகிறது
சூரியவிவசாயின்
கண்கள்...!!!!
ஆயினும்
கண்ணீரின்றி பலனில்லை....!!!!

நிலம்
யாருடைய அணைக்கட்டு.....?
ஓட்டை விழுந்தும்
ஒழுகவில்லையே
கடல்நீர்!!!

டாஸ்மாக்கடைக்கு
போய்வருகிறான்
நிலாக்குடிகாரன்
தினம்
ஒரு வழியில்!!!

அறிவியலில் தேடல்!
நீருக்கு
மிதத்தல்விதி....!!!
நிலவுக்கு
என்னவிதி....!!!

தண்டவாளம்
தற்கொலை
தவிர்க்கும் ஓரிடம்!!!!
கல்லுக்குள் ஒழிந்து
காதல்(....?....)!!!!
. . . . . .
பனைமரம்
பருவமடைந்தது....!!!!
ஆயினும்
தெருவில்
அனாதை....!!!
. . . . . .
கொசுவின்
மருத்துவமனையில்
ஓர் அறிவிப்பு.....!!!
இரத்த தானம்
செய்யாதே.....!!!
. . . . . . .
அழுக்கு
மூட்டைக்குள்
முழுசொத்தும்!!!
ஆயினும்
இல்லை
அபகரிப்பு வழக்கு!
. . . .
வடம் தேவை!
செவ்வாய்த்தேர்
கணம்!
அடம் பிடிக்கும்
விஞ்ஞானக்கடவுள்!
. . . . . . . . . . ' . . . . . . .

எழுதியவர் : ருத்ரா-மறுபதிவு (28-Oct-14, 8:12 pm)
பார்வை : 130

மேலே