எனக்கேவா

கற்பென்றால் என்னவென்று
கடவுளிடம் நான்கேட்டேன்
கற்பனையில் நீங்கள்கொண்ட
கருமமது என்றுரைத்தான்

படைத்ததுயார் நீயல்லவா?
படக்கென்று நான்கேட்டேன்
விடைத்தருமுன் ஒருகேள்வி
என்னையவன் கேட்டுவிட்டான்

என்பெயரை சொல்லிசொல்லி
எத்தனையோ படைத்துள்ளீர்
எவன்கண்டான் நான்படைத்தல் ?
எல்லாமும் கற்பனையே!

இயற்கையினை நான்படைத்தேன்
இன்பத்தினை நான்படைத்தேன்
செயற்கையாக துன்பத்தை
சேர்ந்தேநீர் படைத்துவிட்டீர்

மூலப்பொருள் நான்படைத்தேன்
மூளையையும் தந்துவிட்டேன்
மூலைமுடுக் கெல்லாமும்
முட்களைநீர் பரவிவைத்தீர்

இலவயமாய் நான்கொடுத்தேன்
எல்லாமும் விலைவைத்தீர்
பலமுறவே நான்படைத்தேன்
பாழாக்கிப் போட்டுவிட்டீர்

வளர்ச்சிஎன்ற பெயரினிலே
வாழ்க்கையினைத் தவரவிட்டீர்
வளம்கொடுத்தேன் நலம்கொடுத்தேன்
வறுமையினைநீர் படைத்தீர்

மனிதர்களைப் பிரித்துவைத்தேன்
மலர்களதின் வகைமையைப்போல்
மடையர்நீர் புரியாமல்
மனதினிலே பகைவளர்த்தீர்

அறிவுதந்த என்னையுமே
ஆங்காங்கு ஆலயங்கள்
செறிவோடு கட்டிவெறும்
சிலையாக நிற்கவைத்தீர்

செய்வதெல்லாம் செய்துவிட்டு
செய்ததுநான் என்கின்றீர்
சேட்டைசெயும் மனிதர்களே என்
சாட்டையினை மறக்காதீர்

நேர்மறையும் எதிர்மறையும்
சேர்வதனால் சக்திவரும்
வேறுமுறையில் சேர்த்தாலோ
வேரோடு அழிந்துவிடும்

வித்தையெல்லாம் கற்பித்தேன்
நித்தம்நீர் மறந்துவிட்டு
கத்தனான என்றனக்கே
கற்பிக்க முயலுகிறீர்

எழுதியவர் : abi (29-Oct-14, 1:29 pm)
பார்வை : 377

மேலே