மனசுக்குள் இசைப்புயல் மையம் கொண்டதே
![](https://eluthu.com/images/loading.gif)
எல்லா புயலும் சேதம் தரும்,,
இந்த புயல் மட்டுமே கீதம் தரும்......!!
எல்லா புயலும் கரையை கடந்து சோதிக்கும்
இந்த புயல் மட்டுமே கடலை கடந்து சாதிக்கும்......!!
எல்லா புயலுக்கும் பெயர் சூட்டுவார்கள்
இவர் பெயருக்கு முன்னே புயல் சூட்டினார்கள்......!!
இசைப்புயல் செவியை கடக்கும் போதெல்லாம்
சேதமடையாத உள்ளங்கள் இல்லை......!!
உங்கள் ஹார்மோன்களை கேட்டுப் பாருங்கள்
உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டதை சொல்லும்......!!
உங்கள் நரம்புகளை கேட்டுப் பாருங்கள்-அவை
கிட்டார் கம்பிகளை போல் அதிர்வுகளை உணர்த்திருக்கும்......!!
எல்லா புயலும் வலிமையானது
இந்த புயல் என்றும் எளிமையானது......!!
இசைப்புயல் A.R.Rahman- க்கு நான் எழுதிய கவிதை