என் அயூரியம் நீ

அறிவுரைகளில் அப்பாவாய் நிறை
அன்பினில் என் அம்மாவாய்
பிழைத் திருத்தும் சகோதரியாய்
பாசப் பகிவினில் என் சகோதரனாய் சிறு
கோபமதில் என் காதலியாய்
ஆதியாய் அந்தமுமாய் நிறைவில்
அனைத்துமாய் ; எனை ஆளும் உறவாய்;
என் உயிராய் வாழும் என் தோழனே! என்
நட்பிற்கு ஆதாரம் நீயே! என்றும் என்
நல்வாழ்வுக்கு அடித்தளம் நீயே!

உன் தோள்கள் என்னை
ஆக்சிஜெனேற்றும் வேர்கள்!

உன் கேலிப்பேச்சு என்னைச்
சிரிக்கவைக்கும் நைட்ரஸ் ஆக்சைடு!

உன் நீளமான பேச்சுரை என்னைப்
புடமிடும் பட்டறை!

உன் நயமான தண்டனைகள் என்னைத்
திடப்படுத்தும் கோதுமைக் கஞ்சி!

உன் அளவான அறிவுரைகள் என்னைப்
பலப்படுத்தும் நெற்சோறு!

என் அயூரியம் (தங்கம்) நீ!-என்னை
வலிமைப்படுத்தும் அகுவாடார்டிஸ் (வலிமையான நீர்-நைட்ரிக்அமிலம்) நீ!-என்னைச்
செதுக்கும் ஹீமோகுளோபின் நீ!-என்னைப்
பாதுகாக்கும் ஓசோன் நீ!

என் அன்பானவனே!
என் உடலின் அனைத்து வேதியியலும் நீயேயானாய்!
என் உடன்பிறவா உடன்பிறப்பே
ஏழேழு ஜென்மமும் வேண்டுகிறேன் உன் உறவை!!!

எழுதியவர் : பபியோலா (30-Oct-14, 9:14 pm)
பார்வை : 398

மேலே