நண்பர்கள்
அறுபதுகளில் பிரிந்து இன்று
அறுபதில் இணைந்த கூட்டம்
சிறு குழந்தைகள் இவர்கள்
சிறு வயது கிழவர்கள்
சிகை நரைத்த பின்னாலும்
நகை மறவா மாணவர்கள்
மெத்தப் படித்து மேல்நிலை
எத்திப் பிடித்த வராயினும்
சித்ததில் நிறைவாய் இன்றும்
பித்தம் தலைக் கேறாதவர்கள்
பத்தை மாங்காய் மிளகாய் தூவ
நித்தம் கடித்தவர் குச்சி ஐஸ்
சப்பித் திரிந்தவர் - நினைவில்
தத்தித் தவிப்பவர் மலர்வாய்
அழகாய் கூடி இங்கு
ஆர்வமாய் பழய நாள்
அசை போடும் பாங்கு
அவர்க்கே உரித்து SRKMBHS1969
=================================
1969 ஆண்டு SSLC ஒன்றாய் படித்தவர்கள் மீண்டும் இந்த வாரம் சந்தித்தோம்.