புன்னகைச் சொற்கள் சில
பண்புள்ளவன் உத்தமன்
ஆர்வம் உண்டேல் ஆற்றல் வளரும்
பேச்சை விட மவ்னமே சிறந்தது.
ஒன்றை பலவாக்குவது பகையின் குணம்.
சுறுசுறுப்பு எல்லாவற்றியும் இலகு வாக்கும்.
காலம் தவறினால் எல்லாம் தவறு ஆகும்.
அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
நேர்மையாகவும் தைரியமாகவும் இரு.
ஞானம் என்பது உண்மையின் உற்பத்தி.
தொடங்குவது மனிதன் முடிப்பது இறைவன்.
மற்றவர்களை மகிழ்வித்தால் நீ மகிழ்ச்சி அடைவாய்.
பொறாமை ஒரு பொல்லாத தீய சக்தி.
தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள்.
உன்னை நீயே அறிந்து கொள்.
மாற்றம் என்பது இயற்கயின் நீதி.
ஊள் நல்லவர்களுக்கு வழி காட்டுகிறது.
ஒன்றின் முடிவில் இன்னொன்றின் தொடக்கம்.
அறிவுத் தேடல் விடியலைத் தரும்.
அகங்காரத்தை விட்டவனுக்குத் துன்பமில்லை.
தன் அடக்கம் ஒரு தலை சிறந்த குணம்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் உத்தமனாகவே இரு.
உண்மைக்காக எதனை யும் தியாகம் செய்யலாம்.