பொய்க்கால் குதிரை ------அஹமது அலி----

நாட்டாமையே
செம்பை திருடியதால்
நாடே சிரிக்குது...............!!!
;
;
காட்டாமையும்
கள்ள மெளனம் காத்து
தான் திருடிய செம்பை மறைக்குது......!!!
;
;
குளத்தாமைகள்
கூடிக் கும்மாளமிட்டு
எக்காளம் போடுது..........!!!
;
;
கடலாமையோ
சந்தடி சாக்கில் புகுந்து
சடுகுடு ஆடப் பார்க்குது........!!!
;
;
நாட்டாமை இல்லா
நாற்காலியோ பொய்க்காலில்
பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுது.......!!!

எழுதியவர் : அஹமது அலி (31-Oct-14, 8:54 am)
பார்வை : 335

மேலே