எங்கே சென்றாய் நீ

இக்கவிதையின் கருத்து
எங்கோ படித்தது..
எனக்கு பிடித்தது..
பகிர்கிறேன் என் வரிகளில்!
..

நீண்ட கடற்கரை ஓரம்..
கடக்க வேண்டியது பெரும் தூரம் !
தனியனாய் புறப்பட்ட நேரம்..
கடவுளும் என்னுடன் வரவேண்டும்
என்ற வேண்டுதலை ஏற்றான் அவனும்!

நீண்டதோர் பயணம் ..
இரண்டு ஜோடி கால் சுவடுகள் ..
வழி முழுதும்..
நடு நடுவே எனக்கு சிரமம்..
எப்படியோ முடிந்தது..
எங்கள் பயணம்!

வந்த பாதை
மேலிருந்து பார்க்கையிலே..
அங்கங்கே..
காணாமல் போயிருந்தன
ஒரு ஜோடி கால் சுவடுகள்..

இறைவனைக் கேட்டேன் ..
என்ன இது..
அப்போதெல்லாம் என்னுடன் நீர்
வரவில்லையா என்றேன்..
எங்கே போயிருந்தீர்கள் என்றேன் ..
..
சிரித்தபடி ...இறைவன் சொன்னான்..
குழந்தாய்..
அது உன் சிரம நேரங்கள்..
அப்போது என் தோள்களில்
உன்னை சுமந்து
நடந்து கொண்டிருந்தேன்
என்றான்..!
..
பெற்றோர் ..உற்றோர்..
நல்லோர்..எனப் பலர் ..
நம்முடன் வருவது
இப்படித்தானோ!
முதலில் தெரிவதில்லை!

எழுதியவர் : கருணா (31-Oct-14, 11:02 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : engae senraai nee
பார்வை : 186

மேலே