குமுறிஅழுகிறது

மழையே நீ வரும் போதெல்லாம்
குளிர்கின்ற என் மனம்
இன்று குமுறிஅழுகிறது..
எழிலை கொண்டு தந்து விட்டு
ஏன் ஏழை மக்களை
மண்ணிலே புதைத்தாய் ..
உன் தாலாட்டில் தூங்கிய
ஏழை மக்களை ஏன்
ஏங்கித்தவிக்க விட்டாய்..
இடைவிடாது கொட்டி
ஏனோ மண்ணை கவிழ்த்து விட்டாய்?